சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 மாணவர்களுக்கு கொரோனா - ராதாகிருஷ்ணன்
செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மாப்பேட்டையில் உள்ள சத்யசாய் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் நேற்று வரையில், 30 பேருக்கு தொற்று உறுதியானது. அதன் காரணமாக கல்லூரியில் உள்ள 927 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Comments