களைகட்டிய கோவில் பிரியாணி திருவிழா.. பக்கெட்.. பக்கெட்டாக விடுகளுக்கு வழங்கிய நிர்வாகம்..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சடச்சியம்மன் கோவில் பிரியாணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
கோவிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்றிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த கிடாய்கள் மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு, அவற்றின் ரத்தம் ஐதீகப்படி, கோவில் கிணற்றுக்குள் விடப்பட்டது.
பின்னர் 1,500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடு வீடாக சென்றும் அன்னதானமாக வழங்கப்பட்டது.
Comments