போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஜெலன்ஸ்கி
போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முந்தைய நிலையை ரஷ்யா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ரஷ்யா படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதோடு, போருக்கு முன் இருந்த நிலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும், பிப்ரவரி 23-ந் தேதிக்கு முன் உக்ரைன் இருந்த நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சூழலில், நாளைய தினம் காணொலி வாயிலாக நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனிடையே, உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்குள்ள அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், அவர்களை வெளியேற்றும் பணி தொடர்கிறது.
Comments