இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி மின்சார வாகனங்கள் இருக்கும் - அமைச்சர் நிதின் கட்கரி
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புனே அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் புதிய நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், மின்சார வாகனத் துறையில் பெரிய நிறுவனங்களின் முற்றுரிமைக்குச் சவால் விடும் வகையில் சிறு நிறுவனங்கள் தரமான வாகனங்களைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
250 புதிய நிறுவனங்கள் தரமான மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரித்து வருவதாகவும், அவை பெருமளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறப்பிட்டார். இப்போது நாட்டில் 12 இலட்சம் மின்சார வாகனங்கள் உள்ளதாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று கோடியை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments