ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்.. திகைத்து நின்ற அதிகாரிகள்..
ஜார்க்கண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இளநிலை பொறியாளராக பணியாற்றிய ராம்வினோத் பிரசாத் சின்கா என்பவர், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில், 18 கோடி ரூபாயை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தது அம்பலமானது.
இந்த வழக்கில் பல முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜார்கண்ட் மாநில சுரங்கத்துறை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பூஜா சிங்காலின் வீடு அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா சிங்காலின் ஆடிட்டர் சுமர் குமாரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 17 கோடியும், மற்றொரு இடத்தில் இருந்து ஒன்றரை கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments