அண்டை நாடுகளில் பொருளாதார நெருக்கடி - இந்தியாவுக்கு சவால்
இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை இந்தியாவுக்குச் சவாலாக உள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 விழுக்காடு சீனாவிடமிருந்து பெற்றதாகும். இந்நிலையில் சீனாவிடமும், பன்னாட்டுப் பண நிதியத்திடமும் மேலும் கடன் பெற இலங்கை முயன்று வருகிறது.
நேபாளம், பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான ஆட்சிமுறையாலும் வெளிக்கடன் சுமையாலும் உணவு, எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கையிலும் நேபாளத்திலும் இருந்து அகதிகள் வருகை இந்தியாவுக்கு சவாலாக உள்ளது.
மூன்று நாடுகளிலும் நிலவும் பொருளாதாரச் சிக்கல் அந்நாடுகளுக்கு உதவும் ஒரு வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இந்த நாடுகளில் மக்களின் எதிர்ப்பைத் தணிக்கும் வகையில் இந்தியா கடனுதவி வழங்கி வருகிறது.
அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாமல் வெளிநாட்டுக் கடனில் பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடி காட்டுகிறது.
Comments