புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தபோது நடிகர் சல்மான்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகை...இணையத்தில் வைரல்!

0 7019

ரம்ஜான் பண்டிகைக்கு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான்கானும் தங்களது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனது வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய சல்மான்கான், தீபிகா படுகோனே, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ரமலான் விருந்தளித்தார்.

அப்போது, நடிகர் சல்மான்கானும், நடிகை Shehnaaz Gillயும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது, ஆர்வ மிகுதியில் அந்த நடிகை சல்மான்கனை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

இவர், சல்மான்கானுடன் சேர்ந்து Khan's Kabhi Eid Kabhi Diwali என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதேபோன்று, நடிகர் ஷாருக்கான் தனது வீட்டுக்கு முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு முன் தோன்றி வாழ்த்து கூறியதோடு, நடிகர் விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments