அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி.. 5 அறிவிப்புகள் : 6 இலக்குகள்..!

0 2751

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒராண்டு காலத்தில் செய்து முடிக்கப்பட்ட திட்டங்கள், வாக்குறுதிகளை பட்டியலிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் 600 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை பணம் மிச்சமாவதாக குறிப்பிட்டதோடு,தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் கூறினார்.

இதனையடுத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும், நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும் உள்ளிட்ட ஐந்து புதிய திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்தார்.

உட்கட்டமைப்பில் உலகத்தரம், கல்வி அறிவாற்றலில் பேராளுமைதரம், அன்றாட தேவைகளில் மக்களுக்கு மன நிறைவு, தொய்வில்லாத தொழில்வளர்ச்சி, அனைத்து சமூகத்தினருக்கான மேம்பாடு, நிதி, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றில் வெளிப்படத்தன்மை ஆகிய ஆறு இலக்குகளை அடிப்படையாக கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments