உக்ரைனில் தற்காலிக மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் உதவிகள்...இங்கிலாந்து அரசு முடிவு!

0 1732

உக்ரைனில் தற்காலிக மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 287 நகரும் ஜெனரேட்டர்களை வழங்க இருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 569 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வழங்கப்பட உள்ள 287 நகரும் ஜெனரேட்டர்கள் கிட்டத்தட்ட 8 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார வசதியை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனைகள், தங்குமிடங்கள் மற்றும் மற்ற அத்தியாவசிய சேவைகளுக்கும் அது பயன்படும் என்றும் வணிகம், எரிசக்தி மற்றும் தொழில் வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனுக்கு பெட்ரோலிய எரிபொருட்களை வழங்கி உதவ ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments