உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கூடுதல் நிதி உதவி.. பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், உதிரி பாகங்கள், போர் கருவிகள் வழங்க முடிவு
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிதி மூலம் டாங்குகள், பீரங்கி குண்டுகள் மற்றும் ரேடார்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் நாடாளுமன்றம் வழங்க ஒப்புதல் அளித்த நிதி தீர்ந்து போகும் நிலையில் இருப்பதால், கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்க நாடாளுமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த நிதி செப்டம்பர் இறுதி வரையில் போதுமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு ஆயுதங்களையும், உபகரணங்களையும் கொடுத்து உதவி வருவதாக கூறியுள்ள பைடன், சிக்கலான நிலைக்கு மத்தியில் கூட்டணி நாடுகளுடன் இணைந்து புதினின் போர் இலக்குகளை முறியடிக்க உக்ரைனுக்கு உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
Comments