அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது - இந்தியா கடும் கண்டனம்!
அப்பாவி மக்களின் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது என்று உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆரம்பம் தொட்டே போரை கைவிட்டு அரசுமுறைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி இந்தியா வலியுறுத்தி வருவதாக இந்தியாவின் ஐ நா.பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகர் பிரதீக் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
புக்கா போன்ற இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து, சுதந்திரமான விசாரணை நடத்த கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் பிரதீக் மாத்தூர் தெரிவித்தார்.
Comments