பூஜ்யம் கோவிட் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி- ஜின்பிங் கடும் எச்சரிக்கை

0 3865

சீனாவின் பூஜ்யம் கோவிட் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி- ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் தவிக்கும் மக்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக உணவுப் பொருள் , மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் தலைமை வகித்த அதிபர் சி -ஜின்பிங், கோவிட்டை முற்றிலுமாக ஒழிக்கும் பூஜ்யம் கோவிட் கொள்கையில் உறுதியாக செயல்படுமாறும் இது தொடர்பான விமர்சனங்கள், புகார்களை எதிர்கொள்ளுமாறும் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

வூகானை வென்று விட்டதாகவும் ஷாங்காயிலும் கோவிட்டுக்கு எதிரான போரில் வெல்லப் போவது நிச்சயம் என்றும் சி-ஜின்பிங் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments