வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
ஒடிசா வானிலை மையம் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமைக்குள் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடக்கும் வரை அது 200 கிலோமீட்டர் தூரம் வரை கடலில் மையமிட்டு இருக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments