எம்எல்ஏக்களுக்கு விளையாட்டுப்போட்டி; வெற்றியாளர் தொகுதியில் மைதானம் - அமைச்சர் மெய்யநாதன்
எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பரிசாக அவர்களின் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பேட்மிண்டன் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறினார்.
Comments