சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் பிரியாணி மற்றும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

0 1586
சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் பிரியாணி மற்றும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் பிரியாணி மற்றும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தஞ்சையிலும் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சேலம் ஏவிஆர் ரவுண்டானா உள்பட முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் உரிய பயிற்சி பெற்றவர்களால் அவை தயாரிக்கப்படுகிறதா, தரமான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பிரியாணி கடைகள், ஷவர்மா விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகரிகள், 57 கிலோ அளவிலான கெட்டுப்போன ஷவர்மாக்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments