இந்தியாவின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் ; இந்திய வானிலை ஆய்வுத் துறை
வடமேற்கு இந்தியா, மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
ராஜஸ்தானில் நாளை முதல் மூன்று நாட்களுக்குப் பகல்நேர வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தெற்கு அரியானா, டெல்லி, தென்மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா ஆகிய பகுதிகளில் மே 8, 9 ஆகிய நாட்களில் அனல்காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக வெள்ளியன்று நாட்டின் மின் தேவை எப்போதும் இல்லா வகையில் 207 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.
Comments