இந்தியாவில் கொரோனாவால் 47 இலட்சம் பேர் உயிரிழப்பு.. ஐ.நா. தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

0 1770
இந்தியாவில் கொரோனாவால் 47 இலட்சம் பேர் உயிரிழப்பு.. ஐ.நா. தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 ஆண்டுகளில் 47 இலட்சம் பேர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை மத்திய அரசு மறுத்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் அரசின் கணக்கைவிட அதிகமாக 47 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் இறந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இது மத்திய அரசு தெரிவித்திருந்த கணக்கைவிடப் பத்து மடங்கு அதிகமாகும். உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும். 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 இலட்சத்து 74 ஆயிரத்து 806 பேர் இறந்ததாக அரசின் பதிவேடுகளில் உள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் 60 இலட்சம் பேர் இறந்ததாக அரசுகளின் கணக்கு உள்ள நிலையில், ஒன்றரைக் கோடிப் பேர் இறந்ததாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments