அனல்காற்றுப் பாதிப்புத் தடுப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை - பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
நாட்டில் நிலவும் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அனல்காற்றுப் பாதிப்பைத் தடுத்தல், தென்மேற்குப் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், பிரதமரின் முதன்மை செயலாளர், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை சரியான நேரத்தில் கண்டறியும், தீயை கட்டுப்படுத்துவதை விரைவுபடுத்தவும் வன ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Comments