உக்ரைனின் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!
உக்ரைனின் ரயில்வே கட்டமைப்புகளை உருக்குலைக்கும் நோக்கில் அவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி வழங்கி வரும் நிலையில், அந்த ராணுவ தளவாடங்கள் ரயில்கள் மூலம் உக்ரைனுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ராணுவ தளவாட போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், ரயில் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைனின் ரயில்வே துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நேற்று நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மத்திய உக்ரைனின் டினிப்ரோ நகரில் வாகனங்கள் மற்றும் ரயில்கள் செல்லும் மேம்பாலம் ஒன்று சேதமடையும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments