600 கிளைகளை மூடுகிறது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா..!
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நூறாண்டுப் பழைமையான இந்த வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு நாலாயிரத்து 594 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
நட்டம், வாராக்கடன் அதிகரிப்பு ஆகியவற்றால் 2017 ஜூன் முதல் இந்த வங்கியைச் சீர்திருத்தும் நடவடிக்கையின் கீழ் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 282 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ள போதும் 15 விழுக்காடு வாராக்கடன்களைக் கொண்டுள்ளது.
இதனால் வங்கியின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் 2023 மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடவோ, ஒன்றிணைக்கவோ திட்டமிட்டுள்ளதாக ஆவணத்தை மேற்கோள் காட்டிச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments