பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு...கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

0 1562

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், உணவகத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்த பிரியாணி கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சித்திரவேலு, நேற்று மதியம் அவரது புதிய வீட்டின் கட்டுமான பணியில் இருந்த ஊழியர்களுக்கு அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரியாணி கடையில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை சாப்பிட்ட சிலருக்கு நேற்றிரவு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டதால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments