பழங்குடியினர் கைவினை பொருட்கள் கண்காட்சி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த தோடர் பழங்குடியின பெண்களுக்கு உற்சாக வரவேற்பு!
ஒடிசாவில் நடைபெற்ற பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற நீலகிரியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின பெண்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் சார்பில் பழங்குடியினர் கைவினை பொருட்கள் விற்பனை திருவிழா ஒடிசாவில் நடைபெற்றது.
அதில், நாட்டில் உள்ள 62 பழங்குடியினர்களின் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தோடர் பழங்குடியின பெண்கள், கைகளால் நெய்த பூத்தையலுக்கு முதலிடம் கிடைத்தது.
சான்றிதழ்களையும் பரிசுக் கோப்பையும் பெற்றுக் கொண்டு உதகை வந்தடைந்த பெண்களுக்கு, பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments