வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவாக அமெரிக்காவில் 10 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு.!

0 1987

வேறெந்த நாட்டிலும் இல்லாத இழப்பாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. கடந்த ஒருநாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொற்று பரவியத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், பிணவறைகள் நிரம்பி வழிவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments