"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை அடித்துக் கொன்ற வழக்கு.. தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு போலீசார் சீல்
சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனுமதியின்றி செயல்பட்டதாக தனியார் மையத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி என்பவர் மாப் கட்டையால் தாக்கப்பட்டு, சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார், உரிமையாளர்களான கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அனுமதியின்றி இயங்கியதாக மறுவாழ்வு மையத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
Comments