நேற்றைய சரிவில் இருந்து மீட்சியடைந்தன இந்திய பங்குச்சந்தைகள்.. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 804 புள்ளிகள் உயர்ந்தது

0 6653
நேற்றைய சரிவில் இருந்து மீட்சியடைந்தன இந்திய பங்குச்சந்தைகள்.. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 804 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 804 புள்ளிகள் உயர்வடைந்தது.

வங்கி வட்டி விகிதம், ரொக்கக் கையிருப்பு விகிதம் ஆகியவற்றை உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்துப் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் மீட்சியடைந்தன.

முற்பகல் பத்தரை மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 804 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து 473 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 240 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 918 ஆக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments