பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக கையுறை.. 3டி பிரிண்டட் முறையில் கையுறை உருவாக்கிய ஆய்வாளர்கள்
பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான 3டி பிரிண்டட் கையுறையை பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயற்பியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கை விரல் உள்ளிட்ட உறுப்புகளின் அசைவுகளை உந்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் ஆய்வாளர்கள் கையுறையை உருவாக்கி உள்ளனர். 3 டி பிரிண்டட் முறையில் கையுறை உருவாக்கப்பட்டு உள்ளது.
ரிமோட் மூலம் கையுறை கருவியை கட்டுப்படுத்தி, பக்கவாதம் பாதித்தவரின் கைகளை அசைக்க முடியும் என்றும், குறிப்பிட்ட தொலைவில் இருந்தும் கருவியை கட்டுப்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
patent உரிமை உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் பொது பயன்பாட்டுக்கு கருவி வரும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Comments