2024 டிசம்பரில் வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பத் திட்டம்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு..!
2024ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளி கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலா, மற்றும் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து சூரிய மணடலத்தின் அதிகவெப்பம் மிகுந்த கிரகமான வெள்ளி பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், 2024ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தி, சல்பூரிக் அமில மேகங்களின் கீழ் இருக்கும் மர்மங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
2024 டிசம்பர் மாதம் வாக்கில் பூமியும், வெள்ளி கிரகமும் அருகருகே வருவதால் குறைந்த அளவு உந்துசக்தியை பயன்படுத்தி விண்கலத்தை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தலாம் என்றும் இல்லையென்றால் அடுத்து 2031ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் குறைந்த காலக்கட்டத்தில் திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சோம்நாத் கூறினார்.
Comments