3 நாடுகள் பயணம் நிறைவு- பிரதமர் மோடி இந்தியா வருகை
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டபின், பிரதமர் மோடி தமது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் இறுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். பாரீசில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கட்டித் தழுவி அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் இடையிலான தடையற்ற வர்த்தகம், எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பம் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள், உக்ரைன், ரஷ்யா விவகாரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகம், முதலீடுகளை மேம்படுத்துதல், புதுமை-திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் பயணம் இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பாரிசில் இருந்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.
Comments