உக்ரைனில் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற கூடுதலாக மனிதாபிமான பாதைகளை அமைக்க வேண்டும் -ஐ.நா பொதுச் செயலாளர்
உக்ரைனில் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற கூடுதலாக மனிதாபிமான பாதைகளை அமைக்க வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த சுமார் 100 உக்ரைனியர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த உருக்காலையை சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கமும், ஐ.நா சபையும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து உக்ரைன் மக்களை வெளியேற அனுமதித்தது போல, மேலும் பல மனிதாபிமான பாதைகளை அமைத்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற இருநாட்டு தலைமைகளும் ஏற்பாடு செய்ய வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
Comments