எல்ஐசியின் பங்குகளை வாங்கக் குவியும் விண்ணப்பங்கள்!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி வெளியிடும் பங்குகளில் பாலிசிதாரர்களுக்கான பங்குகள் முழுவதையும் வாங்க முதல் நாளிலேயே விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
எல்ஐசியின் மூன்றரை விழுக்காடு பங்குகளை விற்பதன் மூலம் 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 15 இலட்சத்து 80 ஆயிரம் பங்குகள் எல்ஐசி ஊழியர்களுக்கும், 2 கோடியே 21 இலட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பங்குகளை வாங்க விண்ணப்பம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் 30 விழுக்காடு பங்குகளைக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்களுக்கான பங்குகளின் மொத்த எண்ணிக்கைக்கும், ஊழியர்களுக்கான பங்குகளில் 48 விழுக்காட்டுக்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
Comments