கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலி.. பெய்ஜிங்கில் மெட்ரோ நிலையங்கள், பேருந்து வழித்தடங்கள் மூடல்
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்த ஷாங்காய் நகரில் ஒரு மாதத்திற்கு மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் ஷாங்காய் நகரைப் போன்ற முழு ஊரடங்கை தவிர்க்கும் விதமாக, பொதுப் போக்குவரத்து பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெய்ஜிங்கில் 40க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களும், சுமார் 150க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளன.
Comments