உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாகப் பங்குச்சந்தைகள் அண்மைக்காலமாக வீழ்ச்சி
மருந்து நிறுவனங்களின் பங்குவிலை வீழ்ச்சியால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
உக்ரைன் போரின் விளைவால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாகப் பங்குச்சந்தைகள் அண்மைக்காலமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இன்று முற்பகல் பத்தேமுக்கால் மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 502 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 928 ஆக இருந்தது. மருந்து நிறுவனங்களின் பங்குவிலை மூன்று விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.
Comments