மராட்டிய நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு.. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு
மகாராஷ்ட்ராவில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மராட்டிய நவ்நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவுரங்கபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, ஒலிபெருக்கிகளை வைத்து அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு தெரிவித்தார். ராஜ் தாக்ரேவின் கருத்து சர்ச்சையான நிலையில், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதேநேரம் 2008ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா ரயில்வே தேர்வுகளில் கலந்து கொள்ள வந்த வட இந்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் பிடிவாரண்டு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க ராஜ் தாக்ரே வீடு உள்பட மும்பை உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments