பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கால அளவைக் குறைக்க திட்டம்?
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கால அளவை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைப்பது குறித்து ஆலோசிக்க, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது.
தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி காலம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையிலான கால அளவை குறைப்பதன் மூலம் ஏற்படும் பலன்கள் குறித்தும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் பூஸ்டர் டோஸ் சான்றிதழ் கோரப்படுவதால் சர்வதேச பயணங்கள் மேற்கொள்வோருக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments