தாய்லாந்தில் 6.60 கோடி ஆண்டுகள் பழமையான உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
தாய்லாந்தில் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகள் முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாங்காக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே நடைபாதையில் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட நத்தை வடிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள்ன.
ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மோனைட் என்ற கடல்வாழ் உயிரினத்தின் எச்சம் என்றும் டைனோசர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் அம்மோனைட்டும் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Comments