மது அருந்துவதற்காக ரயிலை நிறுத்திய உதவி ஓட்டுநர்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியும் புறப்படாமல் நின்றதால் பயணிகள் அவதி

0 2492
கேரள மாநிலம் காசர்கோட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பூச்சக்காடு பகுதியில் நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பின்னர் சாலையோரம் இருந்த கிணற்றின் பக்க சுவரை இடித்து தள்ளி கிணற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. breathe அங்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் காருக்குள் இருந்த குழந்தை உட்பட 4 பேரை உயிருடன் மீட்டனர்.

பிகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஓட்டுநர் ஒருவர் மது அருந்துவதற்காக ரயிலை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமஸ்டிபூரிலிருந்து சஹர்சா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், ஹசன்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியும் புறப்படாமல் நின்றுள்ளது. அந்த ரயிலின் உதவி ஓட்டுநர் Karanvir Yadav, ரயிலில் இருந்து கீழே இறங்கி மது அருந்தச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், குடித்துவிட்டு வந்த ஓட்டுநரை கைது செய்தனர். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த ரயில் இயக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சமஸ்திபூர் ரயிவே மேலாளர், ரயில்வே ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments