பூர்வீக சொத்தில் பங்கு கேட்ட அக்காவை கொடூரமாக வெட்டிக் கொன்ற தம்பி

0 7539
பூர்வீக சொத்தில் பங்கு கேட்ட அக்காவை கொடூரமாக வெட்டிக் கொன்ற தம்பி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பூர்வீக சொத்தில் பங்கு கேட்ட சகோதரியை அவரது உடன்பிறந்த தம்பியே அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

அழகாபுரியைச் சேர்ந்த 58 வயதான பாஞ்சாலியும் செவல்பட்டியைச் சேர்ந்த 50 வயதான இரமேஷும் உடன் பிறந்த அக்காள் - தம்பி ஆவர். செவல்பட்டியில் இவர்களுக்குச் சொந்தமாக 3 பூர்வீக வீடுகள் உள்ளன.

அவைகளில் ஒன்றில்தான் இரமேஷ் வசித்து வருகிறார். அந்த 3 வீடுகளில் தனது பங்கை பிரித்துக் கொடுக்குமாறு பல ஆண்டுகளாக தம்பி ரமேஷிடம் பாஞ்சாலி கேட்டு வந்துள்ளார்.

அதற்கு ரமேஷ் மறுத்து வந்த நிலையில், மதியம் வழக்கம்போல் ரமேஷ் வீட்டு முன்பு நின்று வாக்குவாதம் செய்துள்ளார் பாஞ்சாலி. ஆத்திரத்துடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ரமேஷ், அரிவாளை எடுத்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் பாஞ்சாலியை சரமாரியாக வெட்டிக் கொன்றான்.

கொலை செய்துவிட்டு அரிவாளுடன் வடக்கு காவல் நிலையம் சென்று சரணடைந்த ரமேசை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments