ராஜஸ்தானில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ; அசம்பாவிதத்தை தவிர்க்க நாளை இரவு வரை ஊரடங்கு அமல்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அசம்பாவிதத்தை தவிர்க்க நாளை இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜலோரி கேட் பகுதியில் ரமலான் பண்டிகைக்கு ஒலிபெருக்கி, கொடி ஆகியவை கட்டப்பட்டிருந்தது. அப்போது, பரசுராம் ஜெயந்திக்காக மற்றொரு சமூகத்தினர் கொடி கட்ட முயன்ற நிலையில், இருதரப்பினர் இடையே மோதல் மூண்டது.
வாக்குவாதம் கலவரமாக மாறி ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
இருப்பினும், சம்பவ இடத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், வதந்திகள் பரவுவதை தடுக்க, இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதோடு, ஜோத்பூர் நகரின் பல இடங்களில் நாளை இரவு வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments