ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் அடுத்த கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி..!
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை அடுத்து, ஜெர்மனியில் இருந்து டென்மார்க் புறப்பட்ட பிரதமர் மோடியை சந்திக்க பெர்லின் நகரில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் குவிந்தனர். அங்கு, குழந்தைகளிடம் கொஞ்சி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் பயணமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். அங்கு பிரதமரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேளம் வாசித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர். கோபன்ஹேகனில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய - நார்டிக் நாடுகளின் மாநாட்டில் ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். கொரோனா சூழலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி, உக்ரைன் - ரஷ்யா போர், உலகின் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments