மெட் காலா நிகழ்ச்சியில் தனது தாயுடன் பங்கேற்ற டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

0 3543
மெட் காலா நிகழ்ச்சியில் தனது தாயுடன் பங்கேற்ற டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் மெட் காலா 2022 ஆடையலங்கார நிகழ்ச்சியில், உலக பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பங்கேற்றார்.

டுவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய பிறகு, அவர் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி இதுவாகும். கருப்பு நிற tuxedo சூட் அணிந்து வந்த எலான் மஸ்க், 74 வயதான தனது தாய் மேய் மஸ்க் உடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கண்கவர் உடையணிந்து பங்கேற்றனர். சூப்பர் மாடல் பெல்லா ஹடிட், கருப்பு நிறத்தில் கவர்ச்சிகர உடையணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நியூயார்க் நகர காவல் ஆணையர் லாரி கம்போ - பாபி டிஜி ஓலிசா ஜோடி மெட் காலா நிகழ்ச்சியிலேயே தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்திக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments