எதிரிநாட்டு போர்க்கப்பல்களை கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது சீன கடற்படை
எதிரிநாட்டு போர்க்கப்பல்களை கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை சோதனையை சீன கடற்படை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வூசி என்ற போர்க்கப்பலில் இருந்து YJ 21 ரக ஏவுகணை வீசப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை இது உறுதிபடுத்தப்பட்டால் உலகிலேயே போர்க்கப்பல்களை அழிக்கும் YJ 21 ஏவுகணைகளை கொண்டுள்ள முதல் நாடாக சீனா இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சீனா வெளியிட்ட வீடியோ அடிப்படையில், இந்த ஏவுகணை அதிவேகமாக செல்லக் கூடிய இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகவும், ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியதாகவும் இருக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடும் எனக் கூறியுள்ள வல்லுநர்கள், புதிய வகை ஆயுதங்கள், ஏவுகணைகளை இயக்கும் சீனாவின் நடவடிக்கை மேற்கித்திய நாடுகளை அச்சுறுத்தும் போக்கு என தெரிவித்துள்ளனர்.
Comments