உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை

0 1988
உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இம்மாதத்தில் ரஷ்யாவுடன் இணைக்கவும், இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் நகரையும் சுதந்திர குடியரசாக அங்கீகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆதிக்க நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் அங்கீகரிக்காது என தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் நகர மேயர்கள், அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளதும், அங்கு இணையம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments