ஈகைத் திருநாள் கொண்டாட்டம்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு தொழுகை..!

0 2455

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மசூதிகள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

ரம்ஜானை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் உக்கடத்தில் ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

சேலத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். 

திருவள்ளூர் பழைய டோல்கேட் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, குளச்சல் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கரூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments