15 ஆண்டுகளாக 3 பெண்களுடன் லிவிங் டுகெதர்.. தனது 6 குழந்தைகள் முன்னிலையில் 3 காதலிகளை திருமணம் செய்த நபர்

0 20543

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 15 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்த 3 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

Alirajpur மாவட்டம் நன்பூரைச் சேர்ந்த சமர்த் என்பவர் ஒருவர் பின் ஒருவராக 3 பெண்களையும் காதலித்து திருமணம் செய்யாமல் அவர்களுடன் வசித்து வந்துள்ளார். வறுமை காரணமாகமே தான் திருமணம் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 3 காதலிகள் மூலம் அவருக்கு 6 குழந்தைகளும் உள்ளன.

இவர் சார்ந்த பழங்குடியின வழக்கப்படி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவர்களது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். அதற்காகவே திருமண அழைப்பிதழ் அச்சடித்து 3 காதலிகளையும் தனது குழந்தைகள் முன்னிலையிலேயே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தைக் காண உறவினர்கள் பலரும் வந்திருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments