கெட்டுப் போன ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு.. ஆத்திரத்தில் கடைக்கு சொந்தமான வேனைத் தீ வைத்து எரித்த மக்கள்

0 3909

கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கடைக்குச் சொந்தமான வேன் ஒன்றை மக்கள் தீ வைத்து எரித்த செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.

செருவாத்துர் நகரில் உள்ள சிற்றுண்டிக் கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது மாணவி தேவானந்தா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிற்றுண்டி கடையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழுகிய பொருட்களை கொண்டு ஷவர்மா தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கேரளா முழுவதும் ஷவர்மா கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments