படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஐதராபாத் செல்ல விமான நிலையம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்

0 10832

படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என தலைப்பு வைக்கப்பட்டு, கடந்த மாதம் 6 ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசை அமைக்கிறார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 25 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments