வெளுத்து வாங்கும் வெயில் : கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு
கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதிக அளவு தண்ணீர் அருந்துமாறும், காற்றோட்டம் உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்குமாறும், பருத்தி ஆடைகளை அணியுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெயிலில் சுற்றக்கூடாது என்றும், செயற்கை குளிர்பானங்கள், மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள் வெறுங்காலுடன் நடக்க கூடாது என்றும், மதிய வேளையில் மொட்டை மாடியில் விளையாட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கோடை கால நோய்கள் தொடர்பான உதவிக்கு 104 அவரச எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments