ரயில் தண்டவாளத்தில் குறுக்கிட்ட பசு மாடு ; ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பசுவை அப்புறப்படுத்திய ரயில் ஓட்டுநர்

0 18348
ரயில் தண்டவாளத்தில் குறுக்கிட்ட பசு மாடு ; ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பசுவை அப்புறப்படுத்திய ரயில் ஓட்டுநர்

மதுரையில் தண்டவாளத்தில் குறுக்கிட்ட பசுமாட்டின் மீது மோதாமல் தவிர்க்க, ரயில் எஞ்சினை நிறுத்திய ஓட்டுநர், கீழே இறங்கிச் சென்று மாட்டை அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் ரயிலை ஓட்டிச் சென்றார்.

மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. காலை வழக்கம்போல் மதுரையில் இருந்து தேனி நோக்கி சோதனை ஓட்ட ரயில் இன்ஜின் சென்றுகொண்டிருந்தது.

பழங்காநத்தம் மாடக்குளம் இணைப்பு ரயில்வே கேட் அருகே பசுமாடு ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. இதனை தூரத்தில் பார்த்துவிட்ட இஞ்சின் ஓட்டுநர் ஒலி எழுப்பியபடியே ரயிலின் வேகத்தைக் குறைத்து ஓட்டிச் சென்றார்.

இருப்பினும் தண்டவாளத்தைக் கடந்து செல்லாமல் பசுமாடு நடுவிலேயே நின்றதால் எஞ்சினை நிறுத்திய ஓட்டுநர், இறங்கிச் சென்று அதனை அதட்டி ஓட்டிவிட்டு, பிறகு ரயிலை எடுத்துச் சென்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments