சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை ; மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

0 3570
சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை என மாணவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த கல்லூரியின் மாணவர் சங்க பேரவை தலைவர் ஜோதிஸ், சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை வாசிக்கவில்லை எனவும், ஆங்கிலத்தில் இருந்த சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை தான் ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி நேரமின்மை காரணமாக அவசரமாக ஏற்பாடு செய்திருந்ததால், கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் ஆலோசனையின்றி தாங்களே தேசிய மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் இருந்து உறுதிமொழியை பதிவிறக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மகரிஷி சரக் சபத் உறுதிமொழி படிவத்தை ஏற்கக் கூடாது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 4 மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments