பள்ளி மாணவன் குட்டையின் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ; மாணவனின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

0 1361
மாணவனின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

சென்னை மாத்தூரில் அரசுப் பள்ளி மாணவன் குட்டையில் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், மாணவனின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த எழிலரசன் என்ற சிறுவன், கடந்த 28ஆம் தேதி பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் பல்வேறு இடங்களில் தேடி விட்டு போலீசில் புகாரளித்துள்ளனர்.

மறுநாள் அங்குள்ள குட்டை ஒன்றில் இருந்து எழிலரசனின் உடல் மீட்கப்பட்டது. பள்ளி விட்டதும் வீட்டுக்குச் செல்லாமல் சிறுவன் குளத்துக்கு குளிக்கச் சென்றதும் சேற்றில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் அன்றைய தினம் 4 மணிக்கு விட வேண்டிய பள்ளி, வழக்கத்துக்கு மாறாக முன்னறிவிப்பின்றி மதியம் ஒரு மணிக்கே விடப்பட்டதாகவும், எனவே மாணவனின் இறப்புக்குப் பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments